Wednesday, July 4, 2012

என் இதய சத்தத்தை

கண்ணாடி என் இதயம்
உன்னை மட்டுமே
காட்டுவேன் என்றேன்..

கண்ணாடி என்பதாலா
அதை நீ
உடைத்து எறிகிறாய்...

எத்தனை முறை
உடைத்தாலும்
உன்னை மட்டுமே
என் இதயம்
பிரதிபலித்து கொண்டே இருக்க
பாழும் இதயத்திற்கு அறியவில்லை
நீ உடைப்பதை அறியாமல்
சிதறிய சில்லில் கூட
உன்னைக் கண்டு
சிரித்து கொண்டிருகிறது

பூட்டிய இதயத்தில்
சுவாசமாய் நுழைந்தாய்
இன்று உன் இதயத்தை பூட்டி
எனக்கு மட்டும்
கதவடைப்பு செய்கிறாயே...

மறக்க நினைத்தேன்..
மறந்துவிட்டேன்
உன்னை மறைப்பதை..

நினைத்து துடிக்கும்
என் வேதனைக்கு
முற்றுபுள்ளி எப்போது..

உன் முத்தத்தில்
முடித்து வைப்பாயா
இல்லை
என் இதய சத்தத்தை
முடித்த பிறகா??

கண்ணுக்குள் கண்ணீராய்..


நேசிப்பை அறியாதவரை
துள்ளி திரிந்த மனம்
உன் நேசத்தை அறிந்தபின்
துவண்டு போகிறது...

முழுதாய் தராமால்
ஏன் இந்த மாயஜாலம்...
உன்னோடு மட்டுமே
நாள் முழுக்க பேச ஆசையோடு
அனுதினமும் உன்னை தேட
கண்டும் காணமல் நீ...

சிலவார்த்தைகளை மட்டுமே
உதிர்க்கிறாய்...
உதிர்த்த வார்த்தைக்கு ஓராயிரம்
அர்த்தங்களை புரிந்து
மனம் குழப்பத்தில்...

பொறுமை இருந்த என் மனதில்
இன்று ஏனோ பொறாமை குடிக்கொள்ள
உன் மீது வீணான கோபம் கொண்டு
தள்ளி செல்ல  நினைக்கின்றேன்...

என்றோ நீ அனுப்பிய
குறுஞ் செய்தி எல்லாம்
கண்ணீரை வரவைக்க
கண்ணீரோடு படித்துவருகிறேன்....

உன் பிரிவு
என் கண்களில் கண்ணீர்
உன் முகத்தில் புன்னகையோ??

நீயாக ஒரு செய்தி அனுப்பிவிடு
தேடும் மனதை ஆறுதல் படுத்திவிடு...
கொஞ்சும் குழந்தையாய்
ஏங்கும் என் மனதின்
ஏக்கத்தை புரிந்தும்
புரியாமல் நாடகம் ஏன்??

தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருகிறாய்
என் இதயத்தின் துடிப்பாய்
நினைவுகளாய் அருகில் இருந்து
அழவைக்கிறாய்
கண்ணுக்குள்  கண்ணீராய்... ;)

கவியின் வரிகளில்


கண்ணோடு கண்வைத்து
காதல் மொழி பேசி
காலம் மறக்க ஆசை..
கனவில் உன் முகம்
காணும் பொழுதில்
கலையாத கனவாய்
காலம் முடியாமல்
கலையாது தொடர ஆசை
கவி பேசும் காதல்மொழி
கண்ணாலன் அறிந்து
கவியின் கவியில்
கலந்திட ஆசை..
காதல் இலக்கணம்
காதில் உரைக்க
காதல்கவியை பிழையில்லாமல்
காதலோடு கற்க ஆசை ..
காணும் இடமெல்லாம்
கண்ணாலன் உன்முகமாய்
கவிக்கு மட்டுமே தெரிய ஆசை..
கவியின் வரிகளில்
கவியாய் நீ வர
கவிக்குள் கவியாய் உன்னுள்
காலம் முழுதும்
காதலோடு வாழ ஆசை..
காத்திருக்கும் கண்களுக்கு
கண்ணாளனே
காதல் முகம்
காட்டிவிடு...
கண்கள் அயர்ந்த போது
கனவில் வந்து
காதல் செய்து
கலக்கம் தந்து
கண்ணீரோடு தவிக்கவிட்டு
காதல் நோயை தந்து
கண்மறைந்து
கவியை கலங்க வைக்காதே...

கையோடு கைசேர்த்து
அழகான நிலவொளியின்
வெளிச்சம் கூட
அன்னியமாகட்டும்
இக்கணம்...
அருகில் நீ
அணைப்பில் நான்.
அழுகை மறந்து
ஆனந்தம் தேடும்
தருணம்

இரவின் நிலவு
அமைதியை நிலவ
வெளிச்சமில்லா இரவாய்
நிலவது தேய்ந்து மறையாதோ
ஆனந்த தருணம் அது நீளதோ
நாணம் அது குறையாதோ
காதல் கவிதை தொடராதோ

பிரிவின்  நினைவுகள்
அலைமோத
அணைப்பின் கதகதப்பில்
முகம் பார்த்து
தேக்கி வைத்த ஏக்கங்களையும்
சொல்லாத வருத்தங்களையும்
விழிகளில் நான் வரைய
விழியின் மொழி அறிந்து
மௌனமாகி
என்னை புரிந்தும்
புரியாதவனாய்
கண்ணோடு கண்ணோக்கி
மறுமொழி நீ கூற
வெட்கத்தால் நான் துடிக்க
என்னோடு சேர்ந்து
நாணம் தாளாமல்
நிலவும் மறைய
காரிருள் நம்மை சூழும் நேரம்

இதமான அணைப்பு
இறுக்கமாய் மாறி
காற்றின் குளுமை கூட
என்னை அனலாய் சுட்டெரிக்க
உன் அணைப்பில் இருந்து
விடுபட முடியாமல் நான்....

விடியாத இரவாய்

முடியாத உறவை
நீங்காத நினைவாய்
என் வாழ்வது நீளாதோ
உன்னோடு  வாழும் வரம்
கிடைக்காதோ....

என்னவனே
சோகம் மறந்து
சுகம் காணும் நாள் வேண்டும்
பார்வை முழுதும்
உன்னில் நிலை கொண்டு
என்னிலை
மறக்கும் நாள் வேண்டும்
உன் மார்போடு முகம் புதைத்து
துக்கம் மறந்து
முடியாத துயிலை தொடர
கையோடு கைசேர்த்து
காலம் முழுதும் உன்னை தொடர
உனக்கு  பின்னால் நானும்
என் பெயருக்கு பின்னால் நீயும் வருவாயா

Wednesday, June 6, 2012

என்னவனே


அமைதி நிலவும்
நள்ளிரவில்
சோகம் மறைத்து
மனதின் வலிகளை
ஸ்ருதியோடு இசை மீட்க
என்னவனே
உன் செவிகளுக்கு எட்டதோ
உன்னவள் படும் பாடு...

உன்னோடு கைகோர்த்து
காதல் இசை மீட்ட வேண்டிய
கரங்கள்
இன்று தனிமையில்
வேதனையோடு தவிக்க
என் வேதனை தாளாமல்
காரிருள் மேகம்
தன் காதலி நிலவினை
கட்டித்தழுவ செல்கிறதோ...

சீறும்  கடல் அலையும்
சலனமில்லாமல்
மௌனம் காக்க
என்னவனே மௌனம் காக்காமல்
வந்துவிடு உன்னவளை சேர

உன் முகம் பார்த்தே
மலர்ந்த என் முகம்
இன்று நிலம் பார்த்து
கண்ணீர்சிந்த
கண்ணீரை அறியாமல்
கலக்கம் புரியாமல்
கல்லாகி போனாயோ....

தவழும் முத்தத்தை
காற்றோடு   தருகையில்
தழுவ அருகில் இல்லை நீ
என்றாயே
இன்று என் முத்தத்தையும்
வேதனைகளையும்
மனதை வருடும் இசையில்
இதயத்தின் துடிப்போடு
அனுப்பிவைக்கிறேன்
உன்னை வந்து சேர..

வேதனைக்கு மருந்தாக
காற்றோடு தவழும்
முத்தத்தை எனக்காக
திருப்பி அனுப்பி விடு..
நாம் சேரும் நாள் வருகையில்
மொத்தத்தையும்
மறக்காமல் தருகிறேன்
என்னவனே
உன்னகே உனக்காக
Thursday, April 5, 2012

இதயம் இன்றுஉன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும் ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்?? ♥ ♥♥ ♥

உயிரைத் தொலைத்தேன் உன்னில் தானோWednesday, April 4, 2012

என் காதலா ..என் காதலை சொல்ல
ஒரு தினம் போதுமா
என் காதலா ..
உன்னைக் கொண்டாட
ஒரு தினம் போதுமா
காதலோடு காத்திருக்க
ஒரு தினம் போதுமா
தினம் தினம் வேண்டும்
உன்னோடு உண்டான
என் காதலை கொண்டாட
காதலர் தினம்....

காற்றாய் மாறி
காதலிக்க ஆசை
உன் மூச்சுக்காற்றாய்
உன் இதயத்தை
முத்தமிட ஆசை..

உன்னை நினையாமல்
ஒரு நாளும் முடிவதில்லை
உன்னை மறந்தாலே
என் உயிர்
எனக்கு சொந்தம் இல்லை...
என் அன்பில்
நிறமாற்றம் இல்லை.


கனவுகளில் நீ
விழித்திருக்கையில் நீ
நினைவுகளாய் நீ
உன் காதலில்
விழுந்ததால்
எனக்குள் எல்லாமே நீ

இமைக்கும் நொடியில்
உன்னை பார்க்க
தவறினும்

என் இதயபார்வையில்
ஒரு நொடியும் இமைக்காமல்
பார்த்து வருகிறேன்

பூக்கும் மலருக்கு
மரணம் ஒருநாள் தான்
நீ பேசாததால் தினமும்
மரித்து போகிறேன்

எனக்காக நீ
வரமாட்டாயென அறிந்து
நேரம் போவதை அறியாமல்
காத்திருக்கிறேன்...

என தலையணை அருகே
தொலைபேசியோடு
தவமிருப்பேன்
நீ அழைக்க மாட்டாய் என
அறிந்தும்..

உன்னையே நினைத்து
துடித்திருகிறேன்
நீ என்னை நினைக்கமட்டாய்
என அறிந்தும்..

எனக்காக நீயில்லை
என அறிந்தும்...
உனக்கவே காத்திருக்கிறேன்....

இவை வெறும் வரிகள் அல்ல
உன்னால் நான் படும் வலிகள்
காதல் வலிகள்... ♥

**Happy Valentines Day**

வரத்தை தந்துவிடு


எங்கோ அழகிய
பாடல் ஒலிக்க
பாடலின் வரிகளில்
உன்னோடு நான்..

நீ பாட நான்
கேட்ட பாடல்கள்
எல்லாம் நினைவில்
வந்து போக
மனம் கற்பனையில் மிதக்க
கொல்லாமல் கொல்கின்றாயே!

முத்தமிட்டு கொல்லும் வித்தை
கற்றவனோ?
முத்த சத்தத்தில் மூர்ச்சையாகி
உன்னை தேடியே
என் கற்பனை சிறகுகள் பறக்க
வா ஒருமுறை
காதல் வானில்
கவிதையாய் வாழ்ந்துவிடலாம்

யாருமில்லா உலகில்
உன்னருகில் நான் மட்டும்
எனக்காக நீ மட்டும்..
நினைக்கையில் இனிக்கும்
இனிமையான கற்பனை
நிஜத்தில் நிஜமாகும் நாள்
வர கூடுமோ??

முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும்
என்னோடு நீ வேண்டும்
பேராசையோ???
வேண்டாம் பேராசை....
ஒரே நாளில்
முன்னூற்று அறுபத்தைந்து நாள்
வாழ்கையை வாழ்ந்து விடுவோமே...

சூரியனுக்கு விடுமுறை
தந்துவிடு
நிலவின் துணையோடு
காதல் கவிதை எழுதிவிடு
நீ படிக்கும் கவிதையாய்
உனக்கே உனக்காக
நான் இருக்கும் வரத்தை
தந்துவிடு ♥ ♥

சிதறிய சில்லில்கண்ணாடி என் இதயம்
உன்னை மட்டுமே
காட்டுவேன் என்றேன்..

கண்ணாடி என்பதாலா
அதை நீ
உடைத்து எறிகிறாய்...

எத்தனை முறை
உடைத்தாலும்
உன்னை மட்டுமே
என் இதயம்
பிரதிபலித்து கொண்டே இருக்க
பாழும் இதயத்திற்கு அறியவில்லை
நீ உடைப்பதை அறியாமல்
சிதறிய சில்லில் கூட
உன்னைக் கண்டு
சிரித்து கொண்டிருகிறது

பூட்டிய இதயத்தில்
சுவாசமாய் நுழைந்தாய்
இன்று உன் இதயத்தை பூட்டி
எனக்கு மட்டும்
கதவடைப்பு செய்கிறாயே...

மறக்க நினைத்தேன்..
மறந்துவிட்டேன்
உன்னை மறைப்பதை..

நினைத்து துடிக்கும்
என் வேதனைக்கு
முற்றுபுள்ளி எப்போது..

உன் முத்தத்தில்
முடித்து வைப்பாயா
இல்லை
என் இதய சத்தத்தை
முடித்த பிறகா??

எனக்கான கவிதையாய்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எனக்கான கவிதையாய்
உன்னை மட்டுமே
எழுதி வருகிறேன்...

உன்னுள் நான்
இருப்பதாய் கருதி
என்னுள் உன்னை
பொக்கிஷமாய்
பார்த்துவருகிறேன்..
தூரத்தில் உன் குரல்
உன் இதயமட்டும் எனதருகில்...

உன்னை பார்த்திருக்கிறேன்
நீ பாராமல் இருக்கும் தருணத்திலும்...

ஒவ்வொரு நொடியிலும்
ஓவ்வொரு மணியிலும்
ஒவ்வொரு நாளும்
கடந்து போகையில்
நாட்களின் முடிவு
என்னை கலங்க செய்கிறது....

நாட்களை நிறுத்தி விடு
மணித்துளிகள் மாறாமல்
மடிந்து போகட்டும்...
என்னோடு நீ பேசும் தருணங்கள்
நீண்டு போகட்டும்

என்னை பலரும் கடந்து போக
நீ மட்டும் நிலைத்து விட்டாய்
என் இதயத்தின் துடிப்பாய்...

இப்போதெல்லாம்
ஏனோ என்மனம் பதற...
துடிப்பு மட்டும் இரேட்டிப்பாகிறது

பொறுமை இருந்த நெஞ்சில்
இன்று பொறாமை குடிகொள்ள
எனக்காக மட்டுமே நீ
ஏங்குகிறது நெஞ்சம்

அறிந்தும் அறியாமல்
புரிந்து புரியாமல்
நீ நடத்தும் நாடகத்தில்
ஓவ்வொரு நாளும்
போராட்டம் என் மனதுள்....

உரிமையில்லா உன்னிடம்
நேசம் கொண்டேனோ
உணர்வை புரியா உன்னில்
உயிரை தந்தேனோ...
எப்போது உணருவாய்??

தேடி தேடி வரும் என்னை
அலையவைகிறாய்...
கொட்டிதரும் பாசத்தை
குப்பையில் வீசுகிறாய்...

இலையின்
பனித்துளியல்ல
என் நேசம்..
நீ உணரும் தருணம்
ஒருவேளை
என் துடிப்பை நான்
மறந்திருக்கலாம்...

காதலோடு கண்ணீரையும்...


காதலை சொன்னாய்
காதலை தந்தாய்
நட்புக்குள் காதலா
கவலை கொண்டேன்
நட்போடு காதலும் என்றாய்...

காணும் கனவினில்
எல்லாம் உன் முகம் என்றேன்
கனவினிலும்
காதல் செய்வேன் என்றாய்
பேசும் வார்த்தைகள்
இனிமை என்றாய்....
பேசவைத்து பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்தாய்...

கொஞ்சும் என் மொழி
மழலை என்றாய்
சிரிக்கும் என் ஒலி
கவிதை என்றாய்..
செய்யும் குறும்புகள்
பிடிக்கும் என்றாய்..

சின்ன கவிதைகள்
செல்ல சிணுங்கல்கள்
முத்த சத்தங்கள்
இதயத்தின் துடிப்புகள்
எல்லாம் கேட்கும் தருணம்
வேண்டும் என்பாய்

தேடும் கண்களை
தவிக்க வைப்பாய்
தீயாய் தீண்டலை
ரசிக்க வைப்பாய்
கொஞ்சி பேசி
சிலிர்க்க வைப்பாய்
துவளும் மனதை
துடிக்க வைப்பாய்....

காத்திருப்பது பிடிக்கதென்பேன்
காதலோடு காத்திரு
காத்திருப்பதை
மறப்பாய் என்றாய்

காத்திருக்கிறேன்
காதலோடு
மறந்தது நீயோ???

என் உறக்கம் மறந்தேன்
என் குறும்புகளை மறந்தேன்
என் சிரிப்பை மறந்தேன்
என் சினுங்களை மறந்தேன்
என் கவிதையை மறந்தேன்
என்னிடம் நீ ரசித்தவை
எல்லாம் மறந்தேன்
உன்னை மட்டுமே
மறக்க முடியாமல்...

காத்திருந்த கண்கள்
இன்று கண்ணீரில்..

என் கண்ணீரும்
பிடிக்குமோ?
சொல்லாமல்
சென்றுவிட்டாயே
சொல்லி இருந்தால்
கண்ணீரை பரிசளித்திருபேன்
காதலோடு கண்ணீரையும்....

நிஜமான காதலை தந்துவிடு..அந்தி பொழுதினில்
அழகிய நிலவொளியில்
அருகருகே நாம்
ஆனந்தமானது மனம்...

அர்த்தம் இல்லா பேச்சுக்களும்
ஆரவாரம் இல்லாத அமைதியும்
ஆயிரம் எண்ணங்களும்
ஆசை கனவுகளும்
அமுதமாய் கொஞ்சும் மொழிகளும்
அரவணைக்கும் தருணங்களும்
அனைத்தும் எனக்கே எனக்காக வேண்டி
ஆசைகளை சுமந்து உன்னோடு நான்..

உன் தோள் சாய்ந்து
உலகை மறக்க
உன்னை எண்ணியே
உன்னோடு என் கனவுகள் தொடர
உன் கண் பார்த்து கவலை மறந்து
உன்னில் என்னை தொலைத்து
உன் நேசத்தில்
உன்னோடு வாழந்த நினைவுகள்
எல்லாம் என் கண்முன்னே...

காலத்தின் சூழ்ச்சியா
என் பிறவியின் சாபமா??
உன்னை பிரிந்து
என் நாட்கள்
எல்லாம் நரகமாய்...

ஓவ்வொரு முறையும்
நிலவினில் தோன்றி
மறையும் முகமாய்
உன் முகம்..

நிலவே தேய்ந்து விடாதே
என்னவனை
உன்னில் கண்டுவரும்
என்னை தேம்ப விடாதே....

நிலவில்லா வானம்
அமாவாசையாம்
என்னவன்
இல்லா என் வாழ்வு
சூனியமாய்.....

நிலவினில் மட்டும்
நிழலாய் தெரியும் உன் முகம்
நிஜமாய் தெரியும் நாள் வரும்
நிழலாய் போனவனே
நிஜத்தில் வந்துவிடு...
நிஜமான காதலை தந்துவிடு..

நிலவில் வாசம் உனக்கெதற்கு
நிஜமாய் என்னுள் வசிப்பாய் எனில்
நிலவாய் நான் மாறிவிடவா...

நிலவை பார்த்திருக்கிறேன்
நீ வரும் வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ வந்தபின் என் பிரிவின்
வேதனையை தீர்த்துவிடு
அன்று மட்டும்
நிலவு தேய்ந்து போகட்டும்...

Monday, January 2, 2012

மறந்து போவாயோ

வாசித்து பார்க்கிறேன்
உனக்காக நான் வரைந்த
கவிதையை

வாசித்து பார்க்கிறேன்
எனக்காக நீ வரைந்த
கவிதையை

வாசம் செய்தேன்
உன்னுள் நான் கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்

மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்

உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது

உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்

உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....

மறந்து போவாயோ
மறப்பதாய் இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன்

என் வசம் இல்லைஎனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??


உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
வேண்டாம் இதயம் என்னுள்...

உன் இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டேன்
எனக்கு சேர்த்து துடிக்கும்
நம் இதயத்திற்கு
என் முத்தத்தை சத்தமாக்கி
விடவா?

எனக்காக நீ அங்கே துடிக்க
உனக்காக இங்கே
உயிர் வாழ்கிறேன்
உன்னை நினைத்து...

உன் இதயத்துடிப்பின்
ஓவ்வொருத் துடிப்பிலும்
என் காதல் உயிர் வாழ
காதலோடு காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ...

ஒரு நாள் ஏனும் உன்னோடு
உனக்காக உன்னவளாய்
உன் மடியில் உறங்கிடும்
வரத்தை தந்து விடு ..

உன் கரங்கள் எழுதும்
கவிதையாய் என்னை மாற்றிவிடு
உனக்குள் நான் இருப்பதை போல
எனக்குள் நீ வந்துவிடு..

வாழ்நாள் முழுதும்
உன்னோடு தொடர துடிக்கிறேன்
வாழும் காலம் வரை
உன்னையே நினைக்கிறேன்..

என் இதயமே
மௌனமொழி பேசி
என்னை வதைத்து விடாதே..
எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்ள
தற்போது என் இதயம்
என் வசம் இல்லை

இதயத்திற்கு நிரந்தரமாய்...முள்வேலிக்குள்
என் இதயம்...
நெருங்க முடியாதென்றேன்
ஆணவம் வேண்டாமடி
உன்னை அடக்க-என்
அரை நொடி பார்வை
போதும் என்றாய்..

இன்று வரை உன்னைக்
கண்ணோடு கண்ணாக
பார்க்க முடியாமல் நான்...

உனக்கே அறியாமல்
உன்னை ரசித்தேன்...
என்னை அறியாமல்
உன்னில் விழுந்தேன்..

நீ சொன்னது நிஜமோ??
சுட்டி இழுக்கும்
உன் பார்வை வலையில்
விழுந்துவிடக் கூடாதென
தினமும் ஒரு
முகத்திரை எனக்கு...

நீ பார்க்காமலே
உன் கண்களுக்குள்
கைதியாய் நான்...

நொடிக்கு ஆயிரம் வார்த்தை
பேசுபவள்- இன்று
உன் முன் மட்டும்
ஊமையாய் வார்த்தையின்றி
தவிக்கிறேன்..

தமிழில் அத்தனை வார்த்தையும்
எனக்கு மட்டும் அந்நியமாய்
போனதோ....

ஒவ்வொரு முறையும்
நீ என்னை அழைக்கையில்
என் பெயரைக் கூட ரசிக்க
தொடங்கிவிட்டேன்...
உன் உதடு பட்டு
அழகாய் போனது என் பெயர்...

காதல் வந்தால் கவிதை வருமாம் ??
பைத்தியங்களின் உளறலென
கேலி செய்து கிண்டல் அடித்து
அழவைத்து பார்த்தேன்
என் தோழிகளை...

இன்று உனக்காக கவி
எழுத நினைத்தபோது
வார்த்தை பஞ்சம் எனக்கு...

காந்த பார்வை நீ வீசுகையில்
இரும்பு முள்வேலிக்கூட
என்னாகும்...
என்னை அறியாமல்
என் இதயத்தை இழந்தேன்...

என்னை இடமாற்றம்
செய்து விடு..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...

என் "கவி"தைகள் காத்திருக்கும்உனக்காக கவி எழுதி
கண் அயர்ந்த பொழுதில்
கனவில் நுழைந்து
தூக்கத்தை கலைக்கும்
கள்வன் நீ ...

உயிராய் உன்னை நினைத்து
என்னுள் உன்னை சிறை வைத்து
நிஜமாய் என்னுடன் நீ இருக்க
நிழலைப் போல உன்னுள்
என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்து போகும் என் கனவுகளில்
மிதந்துகொண்டே
புல்லரித்து போகின்ற ரோமங்களும்
துடித் துடித்து தவிக்கின்ற இதயமும்
அமைதியாய் இருந்திட
அன்பாய் ஒரு வார்த்தை சொல்வாயா??

என் இரவுகள் எல்லாம் உன் கனவில்
என் தூக்கத்தை விரட்ட
என் பகல்கள் எல்லாம் உன் நினைவில்
துக்கத்தை தாங்கி செல்ல
மௌனமாய் நீ...

ஒவ்வொரு கனவிலும்
என் அருகே நீ இருக்க
முத்தம் கேட்டு இம்சிக்கும்
என்னை சலிக்காமல்
கொஞ்சும் உன்னை
அணைத்து துடித்து
நேசத்தை காட்டும் தருணத்தில்
கலைந்து போகும்
கனவை கொல்ல துடிக்கிறேன்
முற்று பெறாத கனவாய்
என் காதல்...

உனக்காக நான் எழுதும்
கவிதைகள் எல்லாம்
என் அருகே புத்தகமாய்..
பிழைத்திருத்த வசித்தபொழுது
கவியின் வரிகளில்
மயங்கி கனவுலகில் மிதக்க
உன் கவியை நீ படிக்கும் தருணத்தில்
நீயும் உணருவாய்
என் வரிகளின் வலிமையை..
வா கனவுலகில் கை கோர்த்து
காதல் கவிதை நிஜமாய் வரைவோம்

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு
கவி எழுதினாலும்
நீ சொல்லும் "ம்மா" என்ற
வார்த்தைக்கு ஈடாக
என் கவிதை வரி
அமைக்க முடியாமல்
வெக்கத்தில் நான்...

என் கனவுக் காதலனே
இனிக்கும் உன் நினைவுகள்
சிலிக்கும் என் கனவுகள்
கவியை படிக்க வந்துவிடு
கண்விழிக்கும் பொழுது
என் அருகில் நீ இருக்கும்
அந்நொடியில் என்னை மறக்க
காலம் முழுதும்
உன் கையில் கவிதை
புத்தகமாய் நான் இருக்க
தினம் ஒரு கவி படை(டி)த்திடு

உனக்காக மட்டும்
என் "கவி"தைகள் காத்திருக்கும்
என் காதலைச் சொல்ல

உன் அருகாமையால்


உரிமை இல்லா உன்னிடம்
உரிமை கொள்ள நினைத்தேனோ
உள்ளம் உடைந்து போகிறேன்
அதிக பாசம்
அநாதையாக்கும் அறிந்தும்
பாசத்தை வைத்து
பரிதவிக்கும் உள்ளம்,,,

கைபேசி ஒலித்தால்
உன் அழைப்போ என
என் மனம் செல்ல
ஏமாற்றம் வந்து
கவ்விக்கொள்ள
சோர்ந்த முகத்தோடு
கைபேசியை அணைத்தே
பல இரவுகள் செல்லும்...

குறுஞ்செய்தி பலவந்து
குவியும்...
உன் ஒரு செய்திக்காக
என் மனம் அலையும்...

என்னை தவிர்த்து
நீ இருக்க
உன்னை நினைத்து
நான் தவிக்க
என் மனம் நீ
அறிய வாய்ப்பில்லை...

முள்ளாய் குத்தும்
வார்த்தைகளை கூட
மௌனத்தால்
என் கண்ணீரில் நானே
அழித்துக் கொண்டு
மீண்டும் உன்னை நாடியே
என் மனம் வர
என்னை பார்த்தும் பாராமல் நீ,...
அழவைத்து பார்க்கும்
உறவுகளுக்குள்
உன் அருகாமையால்
உள்ளம் மகிழ்ந்தவள்
இன்று உன் அருகாமை வரம்
வேண்டி காத்திருக்கிறேன்...

பாசத்தை எதிர் நோக்கி
உள்ளுக்குள் அழுது
வெளியே சிரிக்கும் மனது
அறியாமல் நீ
புரியாமல் நான்

புறம்தள்ளும் உன்னை
அகம் வைத்ததால்
தாளாத இன்னல் என்னுள்..

வாட்டும் உன்னை
தேடும் மனது
ஏன் இந்த பாரபட்சம்

அணைக்காத கரையை
தொட்டு செல்லும் அலையாய்
உன்னை பார்த்து செல்கிறேன்
நீ பாராத போதும்

கண்ணீர் வந்து
கன்னத்தை முத்தமிட
கண்ணீரில் காலம் செல்ல
கடுகளவும் குறையில்லை
என் நேசம்...

உன்னை தேடும்
மனதை புரியும் நாள்
எப்போது??
புரியாமல் பாசம் வைத்ததால்
புரிய மறுக்கின்றாயோ??
காத்திருக்கிறேன்
உன் பாசத்தை எதிர் நோக்கி
பார்த்திருக்கிறேன்♥ ♥

உன் ஒருவனுக்காகவே...உன்னை நினைத்த
இதயம் இன்று
தனியே துடிக்க
காதலை சொல்ல
முனைந்த முயற்சிகளெல்லாம்
தோல்வியில் முடிய
சுவாசம் மறக்காமல்
உன்னை சுமந்த இதயத்தில்
இன்று ஏனோ சிறு பிளவு
உடைந்த போன இதயம்
தேடி துடிப்பது
உன்னை மட்டுமே

என்னை சுற்றி
வந்த உன்னை
பாராமுகமாய் இருந்ததால்
இன்று என்னை பார்க்காமல்
தவிக்க விட்டு
பாராமுகமாய்
இருப்பது முறையோ...

கோடி வார்த்தைகள்
நொடிக்கொருதரம்
பேசுபவள் இன்று
ஊமையாய்
உன் ஒரு வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்

முள்ளாய் உதிர்த்த
உன் வார்த்தையால்
கிழிந்த என் இதயம்
உதிரம் சிந்த
உதிர்த்து விடு
ஒரு வார்த்தையை ...

காதல் எனும் ஊசியில்
நேசத்தை நூல்லாக்கி
உன் தீண்டலை மருந்தாக்கி
கிழிந்த இதயத்தை தைத்து விடு..

கிழிந்த இதயம்
மீண்டும் துடிக்க நினைப்பது
உன் ஒருவனுக்காகவே....

ஏற்றுக்கொள்
என் இதயத்தை
காதலை காதலாய்
தருகிறேன்...
என்னை விட உன்னை
உண்மையாய்
காதலிக்க யாரால் முடியும்?? ♥ ♥♥ ♥

முத்தமொழிகள்எப்போதாவது
நீ தருகின்ற முத்தங்கள்
ஒவ்வொன்றும்
தித்திக்க
நித்தம் பெற வேண்டி
காத்திருக்கிறேன்
முற்றுபெறா ஏக்கத்தை
தீர்க்க என்னவனே
வந்துவிடு
உன் முத்தமொழிகள்
தேடி என் உதடுகள்
உலர்ந்து போய்
காத்திருகின்றது ♥ ♥♥ ♥