Wednesday, July 28, 2010

விதைத்து விட்டாய்...உன் கண்களுக்குள்
கைதியாய் நான்..
என்றைக்கு
விடுதலை செய்வாய்..
எனக்கும்
இடம்மாற்றம் வேண்டும்..
உன் கண்களில் இருந்து
இதயத்திற்கு நிரந்தரமாய்...

விடை சொல்லமுடியாத
கேள்வியாய்
நீ பார்க்கும் பார்வை
இருக்கும் பொழுது
என்னிடம் மட்டும்
என்ன பதிலை
எதிர் பார்க்கிறாய்??
ஒவ்வொரு முறையும்
உன்னருகில் ஊமையாய்
வார்த்தையின்றி தவிக்கிறேன்
என்னை தூக்கி எறிந்ததாய்
கருதவில்லை நான்..

என்னை உன்னுள்
விதைத்து விட்டாய்...
உன்னுள் நான் வளருவேன்
காதல் விருட்சமாய்...

உன்னில் தொலைத்த
என் நிஜத்தை
தேடுகிறேன்...
என் தேடலில்
கிடைப்பது எல்லாம்
தோல்வியே..

Friday, July 23, 2010

எனக்கே எனக்கு....கடந்த காலம்
கசப்பாய் கடந்து விட
நிகழ் காலம்...
நெருப்பாய் சுட்டுவிட
எதிர்காலம்...
கவலையில் கலங்கிவிட..
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட...

சொந்தமாய்
என் சொந்தமாய்
எதுமே இல்லாத போதும்...
தோல்வியில்
துவண்டு துடித்த
என்னை
தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி...

ஆதரவாய் ஆறுதல்
வார்த்தை பேசி
என் கிறுக்கல்களையும்
ரசித்து....
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து
என் துயர் மாறாக செய்யும்
என் உறவே..
என் நட்பு
தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்
துயர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
என் ஆயிரம் முத்தங்கள்..

என் நட்பே!!!
எனக்கும் மட்டும்
உன் அன்பை தந்துவிடு...
பாசத்தை பகிர்ந்து தருவது
அன்னையாக மட்டுமே
இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு
மட்டுமே வேண்டும்....Wednesday, July 14, 2010

காதலித்து பார்...
காதலித்து பார்
கவிதை வரும்
காதலிப்பவர்களின் சொல்...
கவிதை எழுத மட்டுமே நினைத்தேன்
காதல் கொள்ளவில்லை..ஏனோ
கவிதை வராமல் போனது அன்று..
காதல் என்றால் வெறும்
கனவு உன்னை
காணாத வரை...
கண்டேன் உன்னை...
கண்டுகொண்டேன் என்
காதலை....
கனவு காதலானோ என்று
கண் விழித்து பார்த்தேன்
கண் முன்னே நீ..
கனவு அல்ல நிஜம்தான்...
கண்கள் காட்டிய முதல்
காதல் நீ...
கவிதை எழுத நினைக்கவில்லை...
காகிதம் கண்டவுடன் எழுதுவது எல்லாம்
கவிதையாகி போனது இன்று...
காதலர்களின் கூற்று உண்மை தானோ???
கள்ளம் இல்லா உன் அன்பு
காதல் கொள்ள செய்தது...
காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
காத்திருக்க வைத்தாய்...
காத்திருக்க வைப்பததால் உன்னை
காதலிக்க சொல்கிறது மனது...
காத்திருப்பது பிடிப்பது இல்லை முன்பு..
கால் கடுக்க
காத்திருந்தாலும் வெறுக்க வில்லை
காதல்...
காத்திருப்பது கூட சுகம் தானோ???
கண்ணோடு
கண் சேர்த்த என்
காதலனே.. கண்ணாளனே
கனவிலும் என் நினைவிலும்
காதலனாய் என்றும்
என் கண்ணாளனாய்
காலம் முழுக்க தொடரவேண்டும்
காதல் நம் காதல்...

Monday, July 12, 2010

உன்னோடு வாழ்ந்தால்...


உன்னோடு வாழ்ந்தால்
அவ்வாழ்க்கை
மட்டும் தான் நிஜம்...

வாழ இயலா நிலை...
வாழ துடிக்கும் மனது....
தினமும் வாழ்கிறேன் கனவில்.......

தலையணை மந்திரம்
அறிந்தேன் நான்....
தலையணையாய் நீ!!!
தூங்க முடியாமல் நான்....
என்ன மந்திரம் போட்டாய்........

என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....
ஒவ்வொருமுறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
உன் குரலின் வசியத்தால்...........

இதயம் கனக்கிறது
உன்னை தாங்க இயலவில்லை
என் இதயத்தால்....

நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தை
தேடி அலைகிறேன்
வெட்கத்தால்....

மீண்டும் அவ்வார்த்தைகளை
பேச இயலாமல்...

உன்னை வந்து சேர.....


தண்ணீர் ஊற்றி
வளர்க்கவில்லை
உன் மீது காதலை...

கண்ணீரில்
கரைந்து விடாமல்....
உன் நினவுகளை கொண்டு
நிஜமாய் வாழ்கிறேன்....
உன் காதலுக்காய்...

காதலை சொல்வதற்கு
தயக்கம் எனக்கு...
சொல்ல இயலவில்லை....
சொல்ல துணிவும் இல்லை
சொல்லி பயனும் இல்லை..

பூர்வ
ஜென்மம்
பந்தம் போல
என்னை தொடரும்
உன் நினைவுகள்....

ஏதோ ஒரு
வலி
உன்னை காணும் போது...
கிடைக்காது என்று தெரிந்தும்
நினைக்காமல்
இருக்க இயலவில்லை....

மறுபிறவி வேண்டுகிறேன்...
மீண்டும் பெண்ணாய் பிறக்க......
அப்போதாது
என்னை ஏற்றுக் கொள்......

அணு அணுவாய்

ரசித்து
வாழ வேண்டும்
உன்னோடு....
மறுபிறவி

கிடைக்கும்
என்றால்...
நாளைக்கூட மரணிப்பேண்...
உன்னை வந்து சேர.....

தோள் சாய உன்...


பாசத்துக்காய்
ஏங்கும் நெஞ்சம்

உயிர்
மட்டும் இருக்க
உணர்வுகள்

செத்துப் போயின...


கதறி
அழ
துடிக்கும் மனது

கண்ணீர் மட்டும்
வரவில்லை....


கனவிலும்

நினைக்காத நரகம்

இந்த
தனிமை...
தனிமையில்

சந்தோஷமாய்
இருந்தேன்
சில காலம்...


இன்று
தனிமையின்
வெறுமை
சுடுகின்றது
என் உள்ளத்தை....


இருட்டுக்
குள் இருந்து

வெளிச்சம் நோக்கி
என் கரம்...

ஆறுதல்
சொல்ல
நீ
வேண்டும் ...
தலை
கோதி...

நெற்றியில்
முத்தம் இட்டு,
ஆறுதலாய்
று
உன் கரம் வேண்டும்...


தோள்
சாய
உன்
தோள் கொடு...

சிறிது
நேரம்
என் துக்கம் மறந்து

தூங்கி
கொள்கிறேன்..

நட்பால்
மட்டுமே
உயிர் வாழ்கிறேன்...

நட்பே
என்றும்
எனக்கு மட்டுமே
நட்பாய் இரு....

கற்பனை சந்தோஷம்....


உன்னை நினைத்து
நிறைய எழுதி
வருகிறேன்
எல்லாவற்றிலும்
நீ அன்பாய் இருப்பது
போல தான்...

கற்பனையில் எல்லாம்
நிறைய அன்பு
கிடைக்கிறது
உன்னிடமிருந்து ...
ஆனந்த கண்ணீர் என்னிடம்....
பாசத்துக்கு

ஏங்கும்
பறவையாய்
உன்னை
சுற்றி என் மனம்....

கற்பனையில்
சந்தோஷம்
...
வெறும்
கற்பனையாகவே

முடிவ
தை
தாங்க
முடிவது இல்லை
என்னால்

எல்லோருக்கும்
சந்தோஷம்
கிடைக்கும்
வாழ்க்கையில் தானாம்.....

எனக்கும்
வேண்டும்
சந்தோஷமான
வாழ்க்கை
வேறு
வாழ்க்கை அல்ல....

உன்னோடு மட்டுமே
உண்டாகும்

சந்தோஷ வாழ்க்கை......

அது
வரை
என்
கற்பனை
சந்தோஷம்
தொடரும்......


உனக்காக
வாழ பிடிக்கும்
உனக்காக மட்டுமே
வாழவும் பிடிக்கும்..

உன்னை மறந்து
வாழ இயலாது
என்னால்...

என்னுள் கலந்தவன் நீ
என்னை கரைய வைப்பவன் நீ...
என் மூச்சுக் காற்றில்
கலந்தவனே!!!
நீ பிரிந்து
என் மூச்சை
பிரித்து விடாதே...

நீ இல்லை என்றால்
என் மூச்சு இல்லை....
நானும் இல்லை....

என்னுள் ஏமாற்றம்...


உன்னில் மாற்றம்
என்னுள்
ஏமாற்றம்
இன்றும்

ஒரே
மானநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்
???

பாசத்திற்கு
அளவில்லை
அன்று
...
பாசமே
இல்லாததை போல
உணர்கிறேன் இன்று..


தனிமையில்

தவிப்ப
தாய் ஒரு கலக்கம்..
தினமும்
தூங்க வைப்பாய்..
துயில்
எழுப்ப மறப்பதும் இல்லை...
இன்று????
உனக்கு நேரம் இல்லையோ

என்னை
நினைக்க கூட...
தினமும் எழும்புகிறேன்

ஏமாற்றத்தோடு...


அமைதியாய்
இருந்தேன்
என்னுள் அமைதி இல்லை..

பேசுவதை
கூட குறைத்து
மீண்டும்
பாசத்தை தேடி
உள்ளம்
பரித்தவிக்குது
உன்னால்...


எனக்கே
எனக்கு என்று
உன்னை
நினைத்தது
தான்
என் பிழையோ???

யாரிடமும்
விட்டு கொடுக்க
மனம் இல்லை..

என்னை
மட்டும்
ஏன்
விட்டாய் நீ???

பிரிவு எல்லோருக்கும் வரும்...

பின்னாளில்
பிரியப் போவதற்கு
இந்நாளில் ஒத்திகை ஏன்???????

உன்னை மட்டும்..


நெஞ்சுக்குள் ஏக்கத்தையும்
கண்ணுக்குள் காதலையும்
இதயத்தில் நெருக்கத்தையும்
என் சுவாசத்தில்
உன் வாசத்தையும்
உன் வசமாய் வாழும்
வாழ்க்கை போதும்..
உன் அன்பால் வாழும்
வாழ்க்கை போதும்...

நீ தூரமே இருந்தாலும்
என் இதயத்தில்
நெருக்கம் ஆனாய்..
என் இதயத்தை இறுக்கும்
உன் நினைவுகள்
இறுக்கமாகும் நினைவுகள்
இதமாய் போனது இன்று..

கண்ணில் வழியும் நீர்..
துடைக்கும் கைகளாய் நீ..
வேறென்ன வேண்டும்???
தூக்கத்தை கலைக்கும்
உன் கனவுகள்
தூங்க மறுக்கும் விழிகள்!!!

எல்லாவற்றையும்
எளிமையாக எடுத்துகொண்டேன்
உன்னை மட்டும்
என் மனதில்
வலிமையாக வைத்துகொண்டேன்

வலிமையின் வலியிலும்
வழி தவற வில்லை
உன் வழியில்
என் வழி
இணையும் வரை
காத்திருப்பேன்....

உனக்காக மட்டுமே
காத்திருப்பேன்...
கலங்கிய கண்களோடு...

மெய்யான சுகம்..


"காதல் கவிதைகள்"
பைத்தியங்களின் உளறல்...
சிரித்து கேலி செய்தேன்...
முதன் முதலாய்
நானே பைத்தியமாய்
திரிந்தேன்..
உனக்காக கவிதை எழுத

நினைத்த போது...

என்னை நினைப்பதை
குறைத்தேன்
உன்னை நினைப்பதையே
ரசித்தேன்..
என்ன மாயம் செய்தாய் நீ...
விளங்க முடியாமல் நான்...

உன் மீது எனக்கு
உண்டான காதலை சொல்ல
இந்த ஆயுள் போதும் என்று
கருதவில்லை நான்...
என் ஆயுளை சேர்த்து
நீ வாழ்ந்து பார்
என் அன்பின் ஆழம்
நீ உணருவாய்....


என் உயிர் நீயாகி போனதால்
யாரிடமும்
சொல்ல முடியாமல் நான்..
நீ பேசிய வேளையில்
தொலைந்து போனது
எனது உயிர்..

தூங்கும் முன்
நினைத்து கொள்வேன்
என் வாழ்க்கை
யாரோடு என்று???
இன்று தூங்கும் போது
நினைக்கிறேன்
என் வாழ்க்கை உன்னோடு
மட்டும் தான் என்று...

இது வரை உணரவில்லை
உண்மை சந்தோசம் எதுவென்று???
உன்னோடு இருந்த
ஒவ்வொரு மணி துளிகளும்
உணர்த்தியது
உண்மை சந்தோஷம்
இது தான் என்று....

உன்னோடு பேசும்
நேரங்களில்
மணித்துளிகள் எல்லாம்
பனித்துளியாய் கரைகின்றன...
நீ இல்லாத பொழுதுகளில்
நேரம் போகாமல் என்னை
நிந்தனை செய்து துடிக்க
செய்கிறன...

காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னை காக்க வைத்தாய்..
நீ காக்க வைப்பதாலேயே
உன்னை காதலிக்கிறேன் நான்...

முதன் முதலாய்
என் பெண்மையை
உணர்த்தியவன் நீ ...

மெய்யோடு மெய் சேர்வது
சுகம் இல்லை...
உண்மை காதலொடும்
உன்னோடு

உனக்காக
உனக்காக மட்டுமே
வாழும் சுகம் வேண்டும் எனக்கு...
அதுதான் மெய்யான சுகம்..என் இதயம் உன்னிடத்தில்..


என் காதலை
உணர்த்த சொல்லி
உனக்காக இதயத்தையும்,
விழிகளையும் வானையும்,
தென்றலையும் நிலவையும்
பறவைகளையும், பூக்களையும்
தூதுவிட்டேன்...

பூவானது வாடி வந்து
சொன்னது நீ
மறுத்து விட்டாய் என்று..

கலங்கி போய்
வந்தன கண்கள்..
உணர்ந்து கொண்டேன்..

வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்..
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்..

எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்று விட்டது..
பறவையோ
சோகமாய் வந்தது..

இதயம் மட்டும்
தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது
ஒரு வேளை
என் இதயத்தை மட்டும்
வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ!!!!

இதே நினைவில்
வாழ்கிறேன் நான்...
என் இதயம்
உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்.....

எங்கே இருக்கிறாய்


எங்கே இருக்கிறாய்
நீ..????

காணும் இடங்களில்
எல்லாம் உன் முகம்
மின்னலாய் வந்து
மறையும் மாயம் என்ன??

என் வீட்டைக் கடந்து
போகும் வாகனத்தின்
ஒளியைக் கேட்டு
ஓடி வந்து பார்த்து
ஏமாற்றம்...

மரக்கிளையில்
கொஞ்சி மகிழும்
பறவைகள்...
என் மனம்
பொறாமையில் தவிக்க..
சொல்ல முடியா வகையில்...
கோபம் உன் மேல்...

வேண்டாம் என்றேன்
என்னுள் வந்தாய்
வேண்டி நிற்கிறேன்
என் கண்ணை விட்டு
எங்கே மறந்தாய்...

கண்களை மூடினால்
ஒரு இருட்டு...
இருட்டினில் ஒளியாய்
உன் முகம்...

உன் முகம் பார்த்தே

தூங்கி கொண்டு இருக்கிறேன்
விடியல் பிடிக்கவில்லை..
உன்னை கண்ணில் இருந்து
விரட்டும் இவ்விடியல்
எனக்கு மட்டும் வேண்டாம்...

உனக்காக
காத்திருக்கிறேன்..

உன் உயிரை கொண்டு
உன்னோடு வாழும்
வரம் வேண்டும்..

என் உயிரை தருகிறேன்...
உன்னோடு வாழ...
உன்னை மட்டும்
தந்து விடு
எனக்கு...