முடிந்தால் புரிய வை
உன்னையே நினைக்கும்
மனதுக்கு நினைக்காமல்
இருக்க சொல்லி...
முடிந்தால் புரிய வை
உன்னையே நினைத்து
துடிக்கும் இதயத்தை
துடிக்க மறந்து
உயிர் வாழும் வித்தையினை
முடிந்தால் புரியவை
எனக்கு மட்டுமே உரியவன்
இவனென்று எண்ணாமல்
இருப்பது எப்படி என்று...
முடிந்தால் புரியவை
நீயில்லாமல் இருக்கும்
தனிமையை எதிர்க் கொண்டு
மகிழ்வாய் இருப்பது சாத்தியத்தியமென்று...