
வாசித்து பார்க்கிறேன்
உனக்காக நான் வரைந்த
கவிதையை
வாசித்து பார்க்கிறேன்
எனக்காக நீ வரைந்த
கவிதையை
வாசம் செய்தேன்
உன்னுள் நான் கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்
மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்
உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது
உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்
உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....
மறந்து போவாயோ
மறப்பதாய் இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன்

















