Wednesday, July 4, 2012

என் இதய சத்தத்தை

கண்ணாடி என் இதயம்
உன்னை மட்டுமே
காட்டுவேன் என்றேன்..

கண்ணாடி என்பதாலா
அதை நீ
உடைத்து எறிகிறாய்...

எத்தனை முறை
உடைத்தாலும்
உன்னை மட்டுமே
என் இதயம்
பிரதிபலித்து கொண்டே இருக்க
பாழும் இதயத்திற்கு அறியவில்லை
நீ உடைப்பதை அறியாமல்
சிதறிய சில்லில் கூட
உன்னைக் கண்டு
சிரித்து கொண்டிருகிறது

பூட்டிய இதயத்தில்
சுவாசமாய் நுழைந்தாய்
இன்று உன் இதயத்தை பூட்டி
எனக்கு மட்டும்
கதவடைப்பு செய்கிறாயே...

மறக்க நினைத்தேன்..
மறந்துவிட்டேன்
உன்னை மறைப்பதை..

நினைத்து துடிக்கும்
என் வேதனைக்கு
முற்றுபுள்ளி எப்போது..

உன் முத்தத்தில்
முடித்து வைப்பாயா
இல்லை
என் இதய சத்தத்தை
முடித்த பிறகா??

கண்ணுக்குள் கண்ணீராய்..


நேசிப்பை அறியாதவரை
துள்ளி திரிந்த மனம்
உன் நேசத்தை அறிந்தபின்
துவண்டு போகிறது...

முழுதாய் தராமால்
ஏன் இந்த மாயஜாலம்...
உன்னோடு மட்டுமே
நாள் முழுக்க பேச ஆசையோடு
அனுதினமும் உன்னை தேட
கண்டும் காணமல் நீ...

சிலவார்த்தைகளை மட்டுமே
உதிர்க்கிறாய்...
உதிர்த்த வார்த்தைக்கு ஓராயிரம்
அர்த்தங்களை புரிந்து
மனம் குழப்பத்தில்...

பொறுமை இருந்த என் மனதில்
இன்று ஏனோ பொறாமை குடிக்கொள்ள
உன் மீது வீணான கோபம் கொண்டு
தள்ளி செல்ல  நினைக்கின்றேன்...

என்றோ நீ அனுப்பிய
குறுஞ் செய்தி எல்லாம்
கண்ணீரை வரவைக்க
கண்ணீரோடு படித்துவருகிறேன்....

உன் பிரிவு
என் கண்களில் கண்ணீர்
உன் முகத்தில் புன்னகையோ??

நீயாக ஒரு செய்தி அனுப்பிவிடு
தேடும் மனதை ஆறுதல் படுத்திவிடு...
கொஞ்சும் குழந்தையாய்
ஏங்கும் என் மனதின்
ஏக்கத்தை புரிந்தும்
புரியாமல் நாடகம் ஏன்??

தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருகிறாய்
என் இதயத்தின் துடிப்பாய்
நினைவுகளாய் அருகில் இருந்து
அழவைக்கிறாய்
கண்ணுக்குள்  கண்ணீராய்... ;)

கவியின் வரிகளில்


கண்ணோடு கண்வைத்து
காதல் மொழி பேசி
காலம் மறக்க ஆசை..
கனவில் உன் முகம்
காணும் பொழுதில்
கலையாத கனவாய்
காலம் முடியாமல்
கலையாது தொடர ஆசை
கவி பேசும் காதல்மொழி
கண்ணாலன் அறிந்து
கவியின் கவியில்
கலந்திட ஆசை..
காதல் இலக்கணம்
காதில் உரைக்க
காதல்கவியை பிழையில்லாமல்
காதலோடு கற்க ஆசை ..
காணும் இடமெல்லாம்
கண்ணாலன் உன்முகமாய்
கவிக்கு மட்டுமே தெரிய ஆசை..
கவியின் வரிகளில்
கவியாய் நீ வர
கவிக்குள் கவியாய் உன்னுள்
காலம் முழுதும்
காதலோடு வாழ ஆசை..
காத்திருக்கும் கண்களுக்கு
கண்ணாளனே
காதல் முகம்
காட்டிவிடு...
கண்கள் அயர்ந்த போது
கனவில் வந்து
காதல் செய்து
கலக்கம் தந்து
கண்ணீரோடு தவிக்கவிட்டு
காதல் நோயை தந்து
கண்மறைந்து
கவியை கலங்க வைக்காதே...

கையோடு கைசேர்த்து
அழகான நிலவொளியின்
வெளிச்சம் கூட
அன்னியமாகட்டும்
இக்கணம்...
அருகில் நீ
அணைப்பில் நான்.
அழுகை மறந்து
ஆனந்தம் தேடும்
தருணம்

இரவின் நிலவு
அமைதியை நிலவ
வெளிச்சமில்லா இரவாய்
நிலவது தேய்ந்து மறையாதோ
ஆனந்த தருணம் அது நீளதோ
நாணம் அது குறையாதோ
காதல் கவிதை தொடராதோ

பிரிவின்  நினைவுகள்
அலைமோத
அணைப்பின் கதகதப்பில்
முகம் பார்த்து
தேக்கி வைத்த ஏக்கங்களையும்
சொல்லாத வருத்தங்களையும்
விழிகளில் நான் வரைய
விழியின் மொழி அறிந்து
மௌனமாகி
என்னை புரிந்தும்
புரியாதவனாய்
கண்ணோடு கண்ணோக்கி
மறுமொழி நீ கூற
வெட்கத்தால் நான் துடிக்க
என்னோடு சேர்ந்து
நாணம் தாளாமல்
நிலவும் மறைய
காரிருள் நம்மை சூழும் நேரம்

இதமான அணைப்பு
இறுக்கமாய் மாறி
காற்றின் குளுமை கூட
என்னை அனலாய் சுட்டெரிக்க
உன் அணைப்பில் இருந்து
விடுபட முடியாமல் நான்....

விடியாத இரவாய்

முடியாத உறவை
நீங்காத நினைவாய்
என் வாழ்வது நீளாதோ
உன்னோடு  வாழும் வரம்
கிடைக்காதோ....

என்னவனே
சோகம் மறந்து
சுகம் காணும் நாள் வேண்டும்
பார்வை முழுதும்
உன்னில் நிலை கொண்டு
என்னிலை
மறக்கும் நாள் வேண்டும்
உன் மார்போடு முகம் புதைத்து
துக்கம் மறந்து
முடியாத துயிலை தொடர
கையோடு கைசேர்த்து
காலம் முழுதும் உன்னை தொடர
உனக்கு  பின்னால் நானும்
என் பெயருக்கு பின்னால் நீயும் வருவாயா