Monday, July 12, 2010

மெய்யான சுகம்..


"காதல் கவிதைகள்"
பைத்தியங்களின் உளறல்...
சிரித்து கேலி செய்தேன்...
முதன் முதலாய்
நானே பைத்தியமாய்
திரிந்தேன்..
உனக்காக கவிதை எழுத

நினைத்த போது...

என்னை நினைப்பதை
குறைத்தேன்
உன்னை நினைப்பதையே
ரசித்தேன்..
என்ன மாயம் செய்தாய் நீ...
விளங்க முடியாமல் நான்...

உன் மீது எனக்கு
உண்டான காதலை சொல்ல
இந்த ஆயுள் போதும் என்று
கருதவில்லை நான்...
என் ஆயுளை சேர்த்து
நீ வாழ்ந்து பார்
என் அன்பின் ஆழம்
நீ உணருவாய்....


என் உயிர் நீயாகி போனதால்
யாரிடமும்
சொல்ல முடியாமல் நான்..
நீ பேசிய வேளையில்
தொலைந்து போனது
எனது உயிர்..

தூங்கும் முன்
நினைத்து கொள்வேன்
என் வாழ்க்கை
யாரோடு என்று???
இன்று தூங்கும் போது
நினைக்கிறேன்
என் வாழ்க்கை உன்னோடு
மட்டும் தான் என்று...

இது வரை உணரவில்லை
உண்மை சந்தோசம் எதுவென்று???
உன்னோடு இருந்த
ஒவ்வொரு மணி துளிகளும்
உணர்த்தியது
உண்மை சந்தோஷம்
இது தான் என்று....

உன்னோடு பேசும்
நேரங்களில்
மணித்துளிகள் எல்லாம்
பனித்துளியாய் கரைகின்றன...
நீ இல்லாத பொழுதுகளில்
நேரம் போகாமல் என்னை
நிந்தனை செய்து துடிக்க
செய்கிறன...

காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னை காக்க வைத்தாய்..
நீ காக்க வைப்பதாலேயே
உன்னை காதலிக்கிறேன் நான்...

முதன் முதலாய்
என் பெண்மையை
உணர்த்தியவன் நீ ...

மெய்யோடு மெய் சேர்வது
சுகம் இல்லை...
உண்மை காதலொடும்
உன்னோடு

உனக்காக
உனக்காக மட்டுமே
வாழும் சுகம் வேண்டும் எனக்கு...
அதுதான் மெய்யான சுகம்..



No comments:

Post a Comment