
அழகான நிலவொளியில்
இதமான காற்று
நெஞ்சை வறுட
மெல்லிய ஒலியில்
அமுதமான பாடல் ஓலிக்க
என் அருகே நீ
என்னால் ரசிக்க முடியவில்லை
எதையும்..
என் பார்வை முழுவதும்
உன்னில் நிலை கொண்டு இருக்க
நிலவொளி கூட அந்நியமானது...
உன் அணைப்பில்
காற்றின் குளுமை
என்னை அனலாய் சுட்டது
என்ன மாயம் செய்தாய்
இயற்கைக்கு மாறாய்
எல்லாமே எனக்கு மட்டும்..
உன்னால் என்னை
சுற்றி நிகழும் நிகழ்வுகளை
மறக்கிறேன்
உன்னையே நினைக்கிறேன்
என்ன சாப்பிடாய் என்று
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன் உன்னால்
நான் சாப்பிட மறந்ததை...
உம்ம்ம்மா என்று நீ
வார்த்தையால் கொடுக்கும்
முத்தத்தை பெறவே மீண்டும்
ஒரு ஆயுள் வேண்டுகிறேன்
சத்தம் இல்லாமல்
என்னை கொல்லும்
முத்தமோ??
உன்னால் சிரிக்கிறேன்
உன்னால் அழுகிறேன்
உன்னால் ஆறுதல் அடைகிறேன்
உன்னால் எல்லாம் உன்னால்
என் மனம் அலைந்து திரிவதும்
உன்னால்....
நரகமாய் சில நேரங்களில்
நினைத்தாலும்..
நரகத்திலும் என்னவன் நீ
என்னோடு இருந்தால்
நரகத்தை கூட ரசிப்பேன்
சொர்க்கமாய்..
வந்து விடு!!!
முள்ளில் தைத்து
ரணமான என் இதயத்தை
முள்ளால் எடுக்காதே
உன் முத்ததால் துடைத்து விடு
போதும்....
4வது பத்தியின் முதல் 3வரிகள் மற்றும் 5வது பத்திகளை படிக்கும் போது என்னை அறியாமல் சிரிக்கிறேன்...
ReplyDeleteஇந்த பக்கத்தின் கவிக்கு(2)
இந்த ரசிகனின் சல்யுட்!!
This comment has been removed by the author.
ReplyDelete