நேசத்தை நெஞ்சில் சுமந்து
ஏக்கத்தை கண்களில் தேக்கி
என் சொந்தமாய்
உன்னை நினைத்து
கவலைகள் மற(றை)க்கிறேன்
ஓலை குடிசையில்
வாழ்ந்தாலும்
உன் மார்பில் முகம் புதைத்து
உன் அரவணைப்பில்
கண் மூடி
தூங்கினால்
உலகமே என் அருகில்..
கர்வத்தோடு தூங்கும்
நிம்மதியான தூக்கம் வேண்டும்
பற்றி எரிந்து அணையும்
நெருப்பாய் மடிந்தாலும்
உனக்கான வெளிச்சம்
தருமேயாயின்
நெருப்பாய் மடிவேன்..
விழிகளில் வழிவது
கண்ணீர் இல்லை..
உன் மீது
எனக்கு இருக்கும்
காதல்..
தென்றலை பார்த்தவர்
உண்டோ??
என் காதல் தென்றலோடு
கலந்திருப்பதினால்
தானோ
நீ உணர மறுக்கிறாய்???
கைகளுக்கு சிக்குவதில்லை
தண்ணீர்...
தண்ணீராய் நீ..
கண்ணீரில் நான்..
remove unnecessary add-ins, I can able to see your wonderful codes, it shows yellow color.
ReplyDeleteYour quotes is very nice