தண்ணீர் ஊற்றி
வளர்க்கவில்லை
உன் மீது காதலை...
கண்ணீரில்
கரைந்து விடாமல்....
உன் நினவுகளை கொண்டு
நிஜமாய் வாழ்கிறேன்....
உன் காதலுக்காய்...
காதலை சொல்வதற்கு
தயக்கம் எனக்கு...
சொல்ல இயலவில்லை....
சொல்ல துணிவும் இல்லை
சொல்லி பயனும் இல்லை..
பூர்வ ஜென்மம்
பந்தம் போல
என்னை தொடரும்
உன் நினைவுகள்....
ஏதோ ஒரு வலி
உன்னை காணும் போது...
கிடைக்காது என்று தெரிந்தும்
நினைக்காமல்
இருக்க இயலவில்லை....
மறுபிறவி வேண்டுகிறேன்...
மீண்டும் பெண்ணாய் பிறக்க......
அப்போதாவது
என்னை ஏற்றுக் கொள்......
அணு அணுவாய்
ரசித்து வாழ வேண்டும்
உன்னோடு....
மறுபிறவி
கிடைக்கும் என்றால்...
நாளைக்கூட மரணிப்பேண்...
உன்னை வந்து சேர.....
nice.......
ReplyDeleteமறு பிறவி கிடைக்கும் என்றால் நாளை கூட மரணிப்பேன்.உன்னை வந்து சேர ...
ReplyDeleteநல்ல வரிகள்
காதலுக்காக மறுகணமே மரணிக்கத் துணிந்தது வெகுமதி...
கவிக்கு என் வாழ்த்துக்கள்
(2 கவிக்கும்)