பாசத்துக்காய்
ஏங்கும் நெஞ்சம்
உயிர் மட்டும் இருக்க
உணர்வுகள்
செத்துப் போயின...
கதறி அழ
துடிக்கும் மனது
கண்ணீர் மட்டும்
வரவில்லை....
கனவிலும்
நினைக்காத நரகம்
இந்த தனிமை...
தனிமையில்
சந்தோஷமாய் இருந்தேன்
சில காலம்...
இன்று தனிமையின்
வெறுமை சுடுகின்றது
என் உள்ளத்தை....
இருட்டுக்குள் இருந்து
வெளிச்சம் நோக்கி
என் கரம்...
ஆறுதல் சொல்ல
நீ வேண்டும் ...
தலை கோதி...
நெற்றியில் முத்தம் இட்டு,
ஆறுதலாய் வறுட
உன் கரம் வேண்டும்...
தோள் சாய
உன் தோள் கொடு...
சிறிது நேரம்
என் துக்கம் மறந்து
தூங்கி கொள்கிறேன்..
நட்பால் மட்டுமே
உயிர் வாழ்கிறேன்...
நட்பே என்றும்
எனக்கு மட்டுமே
நட்பாய் இரு....
No comments:
Post a Comment