என் காதலை
உணர்த்த சொல்லி
உனக்காக இதயத்தையும்,
விழிகளையும் வானையும்,
தென்றலையும் நிலவையும்
பறவைகளையும், பூக்களையும்
தூதுவிட்டேன்...
பூவானது வாடி வந்து
சொன்னது நீ
மறுத்து விட்டாய் என்று..
கலங்கி போய்
வந்தன கண்கள்..
உணர்ந்து கொண்டேன்..
வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்..
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்..
எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்று விட்டது..
பறவையோ
சோகமாய் வந்தது..
இதயம் மட்டும்
தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது
ஒரு வேளை
என் இதயத்தை மட்டும்
வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ!!!!
இதே நினைவில்
வாழ்கிறேன் நான்...
என் இதயம்
உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்.....
No comments:
Post a Comment