
நித்தம் உந்தன்
நினைவுகள்.....
நினைக்க நினைக்க
நினைவுகள் சுடுகின்றன....
நிம்மதி இழந்தாலும்
நின் "மதி" கேட்ட
நினைவுகள்
நிலைத்து இன்னும்
நிற்கிறது....
நிஜமானது என் நேசம்
நிஜம் இல்லா பாசத்தை
நிஜம் என்று ஏமந்தேன்
நிஜம் எல்லாம்
நிழலாய் போனது....
நினைவுகளில் வாழும் எனக்கு
நினைவாய்,
நிஜமாய் நீ வேண்டும்
நினைக்க நீ மறந்தாலும்
நினைக்க தவறுவது இல்லை நான்....
நிந்தனை செய்யும்
நினைவுகளின் பாரம்
நீங்காத வடுவாய்
நிலை மாறாமல்
நிலைத்து மனம் துடிக்கிறது....
நினைவே கலையாதே!!!!!
நினைவுகள் மட்டுமே
நிஜம்....
நினைவை சுமப்பதே
நிஜம்...
No comments:
Post a Comment