
தனிமை நரகமாய்
இருந்தது முன்பு.........
தனிமை இனிமையானது
இன்று.....
இருளில் ஒளிரும்
மெழுகுவர்த்தி கூட
அழகு தான்....
இவற்றை எல்லாம்
ரசிக்க மறந்தேன்
எல்லாம் உன்னால் தான்....
உன்னை நினைத்து
தனிமையில் தவிப்பதை விட
உன்னை நினைத்து
கவிதை எழுத தொடங்கினேன்.....
இப்போது தான் இன்னும்
ஆழமாக நேசிப்பதாக
உணர்கிறேன்.....
உன்னை நினைத்து
எழுதி கொண்டே இருக்கிறேன்
முடிக்கவே மனம் இல்லை.....
நான் எழுதும்
எல்லா கவிதைகளிலும்
என் வார்த்தைகளில்
நீ வாழ்கிறாய்.....
நீ என்னை விட்டு
விலகியே இரு...
நான் இன்னும்
உன்னை அதிகமாக
நேசிக்க விரும்புகிறேன்.....
உன்னை முழுவதுமாக
என் கவிதைகளில்
நேசிக்கிறேன்...
அது என்றும் அழியாது....
நீ வரும் நாட்களுக்காக
ஆவலுடன் இருக்கிறேன்...
உன் "கவி" படைத்த
கவிதைகளை
நீ செய்ய போகும்
விமர்சனத்திர்காக....
உன் மீது
நான் கொண்ட காதல்
முடிவது இல்லை....
என் கவிதைகளை போல....
No comments:
Post a Comment