
உன்னை நினைத்து
நான் வடிக்கும்
கவிதை சிலை நீ.....
எழுத்து உளியால்
பார்த்து பார்த்து
வடித்த சிலை நீ.......
ஒருநாளும் சிதையாமல்
நான் பாதுகாக்கும்
பெட்டகம் நீ.....
ஓங்கி அடித்தால் உனக்கு
வலிக்குமோ என்று
என் வார்த்தை
உளீயை பார்த்து
பார்த்து செதுகுகிறேன்....
ஒவ்வொரு முறையும்
முடிவு பெறாத சிலையான
உன்னை மீண்டும்
ஒருமுறை வலம்
வந்து சரி பார்ப்பேன்.......
இதுவரை எனக்கு தெரியவில்லை
என்னில் என்ன பிழை......????
சிலையை முடிக்க
உன் சிலை கண்ணை
துறக்க நாள் பார்த்து வந்தேன்.......
நல்லநாள் என்று
கண்ணையும் துறந்தேன்.....
முழு சிலையும்
முடிவுப் பெற்ற
திருப்தியில் நான்...
உனை அழைத்து வந்து
காண்பிக்க எண்ணி
உன் கைபிடித்து வந்தேன்...
உன் கைப்பற்ற நினைத்து
உன் கையை தேடினேன்...
இன்றுவரை எனக்கு கிடைக்காத
தூரத்தில் நீ....
துயரத்தில் நான்....
நான் அழிந்தாலும்
உனக்காக நான்
வடித்த....
என் கவிதை
சிலை அழிவது இல்லை.....
No comments:
Post a Comment