Thursday, July 9, 2009
Thursday, June 18, 2009
Tuesday, June 16, 2009
Saturday, June 13, 2009
என்னுள் வாழும் உனக்கு....

என்னுள் நீ...
என் இதயத்தில் நீ...
என் இதயத்தின் அறையில்
வாழ்ந்து என்னையும்
வாழவைக்கிறாய்.....
என் கண்களில் நீ...
என் கண்கள் மூட மறுக்கிறது...
உன்னை இருட்டுக்குள்
வாசம் பண்ண வைக்க
மனம் வராமல்....
என் சிந்தையில் நீ...
என் கற்பனை எல்லாம்
கவியமாய் மாற போவது
உன்னால்...உன்னால்...
உன்னால் மட்டுமே....
பேசி பழகிய நாட்கள்
எல்லாம் இன்னும்
என் நாள்குறிப்பில்
பத்திரமாய்......
உன்னோடு பேசாத நாட்கள்
எல்லாம் நான் வாழாத நாட்களாய்
என் இதயக்குறிப்பில்....
என்றென்றும்.....
நீ கண்களால் வரையும்
ஓவியம் எல்லாம்
எனக்கு மட்டும்
புரிய மறுக்கிறது...
நான் காண்பது
உன் கண்களை அல்ல...
உன் இதயத்தை.....
இதயமொழி பேசு
உணர்வேன் நான்....
என் கைகளில் நீ....
காவியமாய்.......
இல்லை இல்லை...
கவிதையாய் வாழ்கிறாய்...
என்னோடு...
என்றும் அழியாத
கவிதை நீ......
Sunday, June 7, 2009
என் சுவாசமாய் நீ.....

உன்னையே எண்ணினேன்
என்னையே மறந்தேன்.....
இலை மூடும் பனிப்போல்
என் பாசத்தை
எனக்குள்மூடினேன்...
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
சொல்ல இயலாமல் நான்....
பாறையில் பூக்கும் பூவாய்
என்னுள் ஒரு ஆனந்தம்......
தனிமையில் சிரிக்கிறேன்.....
உன்னையே தேடி
அலையும் நெஞ்சம்.....
மௌனம் என்னைவிட்டு
வெளியேறாமல் தவிக்கிறது.....
என்னை சுற்றி நிகழும்
நிஜங்கள் கூட நிழலாய்
என் முன் வலம் வருகிறது....
காற்றில் இருந்து
என் சுவாசத்தை
தனியே பிரித்துகொடு....
என் சுவாசமாய் நீ.....
நீ!! காற்றோடு கலப்பதை
தாங்கும் இதயம்
எனக்கு இல்லை!!!!!
Wednesday, June 3, 2009
Tuesday, May 26, 2009
சிறை மீட்டிடு...

நட்பு சிறையில்
சிக்கி தனிமையில்
தவிக்கின்றேன்...
நான்....
நான் நேசிக்கும்
அனைவரும் என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவள்...
நான்...
அந்த எதிர்பார்ப்பின்...
பலம் குறையும் போது
என் மனதின்
பாரம் அதிகரிக்கிறது
என்ன செய்வேன் தோழி!!!!!!
நட்புக்குள் பொய் இல்லை.
பொய் இருந்தால்...
அது நட்பே...
இல்லை....
விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...
என்னை சிறை மீட்டிடு...
தோழி....
உன்னுடைய...........
உண்மையான...
நட்பால்......
நான் நானாக இல்லை...
Monday, May 25, 2009
சொல்லத்துடிக்கிறேன்...
Saturday, May 23, 2009
பிரியமானவனே....
Thursday, May 21, 2009
உன் அன்பான நட்பினால்....
நட்பு...
சந்தோஷங்களையும்
சோகங்களையும் பகிர
கிடைப்பது அரிது...
நம்பிக்கைக்குரிய நட்பு,
உண்மையான நட்பு,
உயர்வான நட்பு...
அறிந்ததில்லை நான்...
ஆனாலும் நான் தேடுவது
உண்மையான நட்பை...
தோழியே..
உன்னிடம் நான்
எதிர்பார்ப்பதும் இதை தான்...
உணர்வாயா என் உணர்வை...
நட்புக்குள் எதிர்பார்ப்பு
இருக்க கூடாதாம்.. ஆனாலும்
நான் எதிர்பார்க்கிறேன்
என் தோழியே॥
நீ என்றும்
என் நட்பாய் இரு...
என் சந்தோஷத்தில் பகிரும்
நீ என் துயரத்திலும்
துணை வருவாயா???
ஏமாற்றம் அடைந்தேன்
எல்லா நட்பிலும்....
ஏற்றம் கொடுத்தாய்
உன் அன்பான நட்பினால்....
உன் அன்பு மட்டுமே உண்மை.....
உணர்த்தேன் நான்
இன்று அது தான்
ஏமாற்றத்தை கூட
ஏற்கும் சக்தி கொடுத்தது.....
உண்மையான நட்பு
இவ்வுலகில் இல்லையடி தோழி....
உணர்ந்தேன் நான் உணர்வாயா நீ...
என் கண்ணீர் துடைக்க
உன் விரல் போதும்
என் துயர் எல்லாம் தூரம் போகும்!!!!
சீக்கிரம் வந்திடு...!!

மந்திர புன்னகை
உன்னிடம் கண்டேன்....உன் சிரிப்பினில்
உலகம் மறந்தேன்....துயர் எல்லாம் தூரம்
நீ என் அருகில்
இருந்தால்.....உன் நினைவுகள் எல்லாம்
நீங்காத வடுக்காளாய்என் நெஞ்சில்.....
அன்பே...!!
நீ உணர்வாயா
உன்னால்நான் நிலைகுலைந்து
போனதை....கண்டும் காணாமல்
நீ!!
உன்னை காணமுடியாமல்
நான்....
சூரியன் காணாத தாமரை
போல்ஆனேன்॥!!!
உன் நேசம் முழுதும்
எனக்கே சொந்தம்
அதை முழுசாய்
எனக்கே தந்திடுசீக்கிரம் வந்திடு!!!!
Wednesday, May 20, 2009
உன்னை நினைத்து தனிமையில்!!!!!

தனிமை நரகமாய்
இருந்தது முன்பு.........
தனிமை இனிமையானது
இன்று.....
இருளில் ஒளிரும்
மெழுகுவர்த்தி கூட
அழகு தான்....
இவற்றை எல்லாம்
ரசிக்க மறந்தேன்
எல்லாம் உன்னால் தான்....
உன்னை நினைத்து
தனிமையில் தவிப்பதை விட
உன்னை நினைத்து
கவிதை எழுத தொடங்கினேன்.....
இப்போது தான் இன்னும்
ஆழமாக நேசிப்பதாக
உணர்கிறேன்.....
உன்னை நினைத்து
எழுதி கொண்டே இருக்கிறேன்
முடிக்கவே மனம் இல்லை.....
நான் எழுதும்
எல்லா கவிதைகளிலும்
என் வார்த்தைகளில்
நீ வாழ்கிறாய்.....
நீ என்னை விட்டு
விலகியே இரு...
நான் இன்னும்
உன்னை அதிகமாக
நேசிக்க விரும்புகிறேன்.....
உன்னை முழுவதுமாக
என் கவிதைகளில்
நேசிக்கிறேன்...
அது என்றும் அழியாது....
நீ வரும் நாட்களுக்காக
ஆவலுடன் இருக்கிறேன்...
உன் "கவி" படைத்த
கவிதைகளை
நீ செய்ய போகும்
விமர்சனத்திர்காக....
உன் மீது
நான் கொண்ட காதல்
முடிவது இல்லை....
என் கவிதைகளை போல....
நினைவே கலையாதே!!!!!

நித்தம் உந்தன்
நினைவுகள்.....
நினைக்க நினைக்க
நினைவுகள் சுடுகின்றன....
நிம்மதி இழந்தாலும்
நின் "மதி" கேட்ட
நினைவுகள்
நிலைத்து இன்னும்
நிற்கிறது....
நிஜமானது என் நேசம்
நிஜம் இல்லா பாசத்தை
நிஜம் என்று ஏமந்தேன்
நிஜம் எல்லாம்
நிழலாய் போனது....
நினைவுகளில் வாழும் எனக்கு
நினைவாய்,
நிஜமாய் நீ வேண்டும்
நினைக்க நீ மறந்தாலும்
நினைக்க தவறுவது இல்லை நான்....
நிந்தனை செய்யும்
நினைவுகளின் பாரம்
நீங்காத வடுவாய்
நிலை மாறாமல்
நிலைத்து மனம் துடிக்கிறது....
நினைவே கலையாதே!!!!!
நினைவுகள் மட்டுமே
நிஜம்....
நினைவை சுமப்பதே
நிஜம்...
கவிதை சிலை நீ.....

உன்னை நினைத்து
நான் வடிக்கும்
கவிதை சிலை நீ.....
எழுத்து உளியால்
பார்த்து பார்த்து
வடித்த சிலை நீ.......
ஒருநாளும் சிதையாமல்
நான் பாதுகாக்கும்
பெட்டகம் நீ.....
ஓங்கி அடித்தால் உனக்கு
வலிக்குமோ என்று
என் வார்த்தை
உளீயை பார்த்து
பார்த்து செதுகுகிறேன்....
ஒவ்வொரு முறையும்
முடிவு பெறாத சிலையான
உன்னை மீண்டும்
ஒருமுறை வலம்
வந்து சரி பார்ப்பேன்.......
இதுவரை எனக்கு தெரியவில்லை
என்னில் என்ன பிழை......????
சிலையை முடிக்க
உன் சிலை கண்ணை
துறக்க நாள் பார்த்து வந்தேன்.......
நல்லநாள் என்று
கண்ணையும் துறந்தேன்.....
முழு சிலையும்
முடிவுப் பெற்ற
திருப்தியில் நான்...
உனை அழைத்து வந்து
காண்பிக்க எண்ணி
உன் கைபிடித்து வந்தேன்...
உன் கைப்பற்ற நினைத்து
உன் கையை தேடினேன்...
இன்றுவரை எனக்கு கிடைக்காத
தூரத்தில் நீ....
துயரத்தில் நான்....
நான் அழிந்தாலும்
உனக்காக நான்
வடித்த....
என் கவிதை
சிலை அழிவது இல்லை.....
Subscribe to:
Posts (Atom)