ஓயாமல் ஒலித்து நகரும்
நேரத்துளிகள் காலத்தை
கடந்து போகச்செய்ய
வேகமாய் துடித்துக்
கொண்டிருக்கும்
"இதயம்" ஒரு கணம்
நின்று விடுமோ என அச்சத்தில்
என் உள்ளம் துடிக்க
மரணத்தின் பயமோ
கருதவில்லை நான்....
மரணத்திலும் மரிக்காத
நினைவுகளாய்
காலம் கடந்தும்..
என் காலம் கடந்தும்
நீங்காது வாழும்
உன் நினைவுகள்
மட்டும் என்னோடு
உனக்குள் தொலைந்த
இதயத்தை தேட
உன் நினைவுகள்
சொந்தமாகி போனது