தினமும் உன்னை
ஒரு முறையாவது
பார்த்து விட்டு செல்கிறேன்
தூரத்தில் இருந்து
பார்ப்பது கூட
சுகம் தான் எனக்கு...
புரிந்து இணைந்தோம்
புரியாமல் பிரிந்தோம்
தோல்வியில் துவண்ட
எனக்கு
தோள்சாய தோள் தந்தாய்
சாயும் வேளையில்
சொல்லாமல் ஏன் சென்றாய்....
தோல்வியை பர்க்கவிடின்
கதறி இருப்பேன்
தோல்வியே எனக்கு
சாபம் ஆனதால்
சலனம் இல்லாமல்
எல்லாமே என் மனதோடு
பூட்டினேன்
உன்னை என் மனதோடு
பூட்டினேன்....
சில நாட்களாய்
இருப்பினும்
சொர்க்க நாட்கள்..
உன்னை எனக்கு
சொந்தமாக்கிய நாட்கள்..
என் பெயரை நீ
உச்சரிக்கும் தருணத்தில்
எல்லாம் செத்து பிழைத்தேன்...
இன்று செத்துக்கொண்டிருகிறேன்
உன் குரல் கேட்காமல்...
நேசிக்கும் உரிமை தந்தாய்
நேசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்..
ஒரு முறை ஏனும்
என் நேசம் உனக்கு புரியாதோ????
உன் குரல் கேட்கும்
காலம் வருமோ??
காத்து கொண்டிருக்கிறேன்
காலம் வருமோ
தெரிய வில்லை
கேள்விக்குறியாய்
நான்....
nalla eluthirukeeenga :) romba nalla iruku kavi
ReplyDelete