வாசம் செய்தேன்
உன்னுள் நான் கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்
மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்
உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது
உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்
உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....
மறந்து போவாயோ
மறப்பதாய் இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன்
உனக்காக கவி எழுதி கண் அயர்ந்த பொழுதில் கனவில் நுழைந்து தூக்கத்தை கலைக்கும் கள்வன் நீ ...
உயிராய் உன்னை நினைத்து என்னுள் உன்னை சிறை வைத்து நிஜமாய் என்னுடன் நீ இருக்க நிழலைப் போல உன்னுள் என்னை புதைத்துக்கொண்டு சிலிர்த்து போகும் என் கனவுகளில் மிதந்துகொண்டே புல்லரித்து போகின்ற ரோமங்களும் துடித் துடித்து தவிக்கின்ற இதயமும் அமைதியாய் இருந்திட அன்பாய் ஒரு வார்த்தை சொல்வாயா??
என் இரவுகள் எல்லாம் உன் கனவில் என் தூக்கத்தை விரட்ட என் பகல்கள் எல்லாம் உன் நினைவில் துக்கத்தை தாங்கி செல்ல மௌனமாய் நீ...
ஒவ்வொரு கனவிலும் என் அருகே நீ இருக்க முத்தம் கேட்டு இம்சிக்கும் என்னை சலிக்காமல் கொஞ்சும் உன்னை அணைத்து துடித்து நேசத்தை காட்டும் தருணத்தில் கலைந்து போகும் கனவை கொல்ல துடிக்கிறேன் முற்று பெறாத கனவாய் என் காதல்...
உனக்காக நான் எழுதும் கவிதைகள் எல்லாம் என் அருகே புத்தகமாய்.. பிழைத்திருத்த வசித்தபொழுது கவியின் வரிகளில் மயங்கி கனவுலகில் மிதக்க உன் கவியை நீ படிக்கும் தருணத்தில் நீயும் உணருவாய் என் வரிகளின் வலிமையை.. வா கனவுலகில் கை கோர்த்து காதல் கவிதை நிஜமாய் வரைவோம்
ஆயிரம் வார்த்தைகள் கொண்டு கவி எழுதினாலும் நீ சொல்லும் "ம்மா" என்ற வார்த்தைக்கு ஈடாக என் கவிதை வரி அமைக்க முடியாமல் வெக்கத்தில் நான்...
என் கனவுக் காதலனே இனிக்கும் உன் நினைவுகள் சிலிக்கும் என் கனவுகள் கவியை படிக்க வந்துவிடு கண்விழிக்கும் பொழுது என் அருகில் நீ இருக்கும் அந்நொடியில் என்னை மறக்க காலம் முழுதும் உன் கையில் கவிதை புத்தகமாய் நான் இருக்க தினம் ஒரு கவி படை(டி)த்திடு
உனக்காக மட்டும் என் "கவி"தைகள் காத்திருக்கும் என் காதலைச் சொல்ல
எப்போதாவது நீ தருகின்ற முத்தங்கள் ஒவ்வொன்றும் தித்திக்க நித்தம் பெற வேண்டி காத்திருக்கிறேன் முற்றுபெறா ஏக்கத்தை தீர்க்க என்னவனே வந்துவிடு உன் முத்தமொழிகள் தேடி என் உதடுகள் உலர்ந்து போய் காத்திருகின்றது ♥ ♥♥ ♥