உள்ளுக்குள் அழுது
வெளியே சிரிக்கும் மனது
அறியாமல் நீ
புரியாமல் நான்
புறம்தள்ளும் உன்னை
அகம் வைத்ததால்
தாளாத இன்னல் என்னுள்..
வாட்டும் உன்னை
தேடும் மனது
ஏன் இந்த பாரபட்சம்
அணைக்காத கரையை
தொட்டு செல்லும் அலையாய்
உன்னை பார்த்து செல்கிறேன்
நீ பாராத போதும்
கண்ணீர் வந்து
கன்னத்தை முத்தமிட
கண்ணீரில் காலம் செல்ல
கடுகளவும் குறையில்லை
என் நேசம்...
உன்னை தேடும்
மனதை புரியும் நாள்
எப்போது??
புரியாமல் பாசம் வைத்ததால்
புரிய மறுக்கின்றாயோ??
காத்திருக்கிறேன்
உன் பாசத்தை எதிர் நோக்கி
பார்த்திருக்கிறேன்♥ ♥
No comments:
Post a Comment