skip to main |
skip to sidebar

என் நேசத்தை
உனக்கு உணர்த்த
என் மௌனத்தை தவிர
வேறு மொழி
என்னிடம் இல்லை...
உன்னை நேசிக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
கரைந்து போகாமல்
என்னுள்
உறைந்து போயின...
என் கன்னம் வருடி
என் கண் பார்த்து
நீ பேசும்
அந்த நொடி வேண்டும்
மறுபடியும்....
என் கண்ணீர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
முத்தமிட்டு மகிழும்
தருணத்தில்
என் துக்கத்தின் வலி
பஞ்சாய் பறந்திட வேண்டும்...
எனக்காக பிறந்தவனே என்னுள் கலந்தவனே
கண்கள் உன்னை
கண்டதால் தானோ
என்னுள் நுழைந்தாய்...
என்னுள் நீ வந்ததால்தனோ
புதிதாய் பிறந்தேனோ
மரிக்காமல் ஜனனம் தந்தவனே
உன்னை மட்டுமே
நேசிக்கும்
என் இதயத்திற்கு
மூச்சு காற்றாய்
வந்து விடு ...
உன்னை நேசித்து
சுவாசிக்கும் வரத்தை
தந்து விடு....
உன்னோடு இருக்கும்
அழகிய தருணம்
அழகாய் தொடரவேண்டும்..
என் சந்தோசம்
முடியும் தருணம்
என் உயிர்
உன் மடிதனில்
பிரிந்திட வேண்டும்...