என் நேசத்தை
உனக்கு உணர்த்த
என் மௌனத்தை தவிர
வேறு மொழி
என்னிடம் இல்லை...
உன்னை நேசிக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
கரைந்து போகாமல்
என்னுள்
உறைந்து போயின...
என் கன்னம் வருடி
என் கண் பார்த்து
நீ பேசும்
அந்த நொடி வேண்டும்
மறுபடியும்....
என் கண்ணீர் துடைக்கும்
உன் கரங்களுக்கு
முத்தமிட்டு மகிழும்
தருணத்தில்
என் துக்கத்தின் வலி
பஞ்சாய் பறந்திட வேண்டும்...
No comments:
Post a Comment