பாசத்தை தேடும்
மனது...
பழகிய போது
பாசம் தந்து
காயப்பட்ட மனதிற்கு
கனிவாய் பேசி
கவலை மறக்க செய்தாய்
பரிதவிக்கும்
மனதுக்கு பக்குவமாய்
ஆறுதல் அளித்தாய்...
இன்றும் ஆறுதலை
தேடி அலைகிறேன்...
பாசம் தர மறுத்தாலும்
தாங்கிக் கொள்வேன் ...
என்னை விட்டு
விலகி நின்று
உன்னால் நான்
புறக்கணிக்க படுவதை
தாங்கி கொள்ளும்
இதயம் என்னிடம் இல்லை...
எதையும் தாங்கும் இதயம்
எல்லோருக்கும் உண்டாம் ...
இதையும் தாங்கும்
இதயத்தை
எனக்கு மட்டும்
தந்துவிடு இறைவா....
No comments:
Post a Comment