சட்டென்று உந்தன் நினைவுகள் அனலாய் தேகத்தில் பரவிட ஏக்க பெருமூச்சில் நிலவது கருகிடுமோ வெண்மை அது சிதைந்திடுமோ மேன்மை அது மறைந்திடுமோ சோகம் நெஞ்சில் தீயாய் சுட
உன் கை வருடி இதம் தனை காண உன்னை தேடிய விழிகளில் வெட்கம் பரவிட என்னோடு சேர்ந்து வெண்ணிலவும் நாணத்தால் மேகத்தை அணைத்துக்கொள்ள துடித்து கருமேகத்தை தீண்ட
கருமேகமோ தீண்டிய வேகத்தில் இருள் போர்வையை விரித்து வெண்ணிலவோடு ஊடல் கொள்ள மழையாய் காதலை தானை வாரி இறைத்திதிட பொழிந்திட்ட மழைதனில் என் தேகம் சிலிர்க்க வெண்ணிலவின் மீது கோபமாய் ஒரு பார்வை...
நிலவின்மேல் கோபம் கொண்டு வராத தூக்கத்தை வரவைக்க உன் நினைவுகளை நெஞ்சோடு அணைத்து தூங்க முயல விடியல் வந்து வெள்ளிச்ச கதவை திறக்க ஏக்கத்தோடு விடிகின்ற பொழுதாய் இன்றும் என் விடியல் ♥