Wednesday, August 28, 2013
Sunday, July 28, 2013
காத்திருக்கிறேன் காதலோடு..
கவிதைகளின் வரிகளில்
வாழும் வார்த்தை நீ
என் உணர்வுகளின் துடிப்பில்
இயங்கும் இதயம் நீ
இனிக்க இனிக்க இனிமைத் தரும்
நினைவும் நீ.
நினைவுகளில் சுழற்சியில் நித்தமும்
தொடர்ந்து வரும் நிழலும் நீ..
கோபத்தில் திட்டினாலும்
புன்னகையால் இதயம் திருடும்
கள்வன் நீ..
மௌனமாகும் நொடிகளில்
மோகத் தீயை மூட்டும்
தணலும் நீ..
தணலை தகிக்க தணலாய் அணைத்து
குளுமை தரும் தென்றல் நீ..
வெட்கம் தந்து தலை குனிய
கண்சிமிட்டி பார்வையால்
களவாடும் கள்ளனே
உணராத காதலை
உணரவைத்து
தினம் தினம் உளற வைத்து
தூரமாய் இருந்து துடிக்க வைத்து
காத்திருப்பதும் சுகம் என்கிறாயே
காத்திருக்கிறேன்.
வாழாத எல்லா நொடிகளையும்
ஒரே நாளில் வாழ்ந்து முடித்திட
காத்திருக்கிறேன் காதலோடு..
Sunday, June 30, 2013
இன்றும் என் விடியல்
தூங்காமல் விழித்திருக்கும்- விழிகள்
இருளில் ஒளிரும் நிலவினை ரசித்து
வெண்மை ஒளியின்
மென்மை அழகாய்
மனதுக்கு இதமாய்
குளிர்சிதனை தேகம் உணர்ந்திட
சட்டென்று உந்தன் நினைவுகள்
அனலாய் தேகத்தில் பரவிட
ஏக்க பெருமூச்சில்
நிலவது கருகிடுமோ
வெண்மை அது சிதைந்திடுமோ
மேன்மை அது மறைந்திடுமோ
சோகம் நெஞ்சில் தீயாய் சுட
உன் கை வருடி இதம் தனை காண
உன்னை தேடிய விழிகளில்
வெட்கம் பரவிட
என்னோடு சேர்ந்து
வெண்ணிலவும் நாணத்தால்
மேகத்தை அணைத்துக்கொள்ள
துடித்து கருமேகத்தை தீண்ட
கருமேகமோ தீண்டிய வேகத்தில்
இருள் போர்வையை விரித்து
வெண்ணிலவோடு ஊடல் கொள்ள
மழையாய் காதலை தானை
வாரி இறைத்திதிட
பொழிந்திட்ட மழைதனில்
என் தேகம் சிலிர்க்க
வெண்ணிலவின் மீது
கோபமாய் ஒரு பார்வை...
வெட்கம் கொண்டனள் இவள்
வேந்தனை அணைத்தது
வேதனை தீர்த்துக்கொள்வது நீயோ..
நிலவின்மேல் கோபம் கொண்டு
வராத தூக்கத்தை
வரவைக்க உன் நினைவுகளை
நெஞ்சோடு அணைத்து
தூங்க முயல விடியல் வந்து
வெள்ளிச்ச கதவை திறக்க
ஏக்கத்தோடு விடிகின்ற
பொழுதாய் இன்றும் என் விடியல் ♥
Sunday, June 9, 2013
அணைத்துவிடு
பகலிரவாய் பாசத்தை
பக்குவமாய் தந்தவன்
தெரியாத காதலை
கவிதையாய் கற்றுத் தந்தவன்
உண்மைக் காதலை
முதல்முறையாய்
முழுதாய் தந்தவன்,
திகட்டாமல் காதலைத் தந்து
திணற வைத்தன்
ஓயாமல் உன் பெயரை
உளற வைத்தவன்.
எனக்கு எல்லாமுமாய்
இருந்தவன்..
கண் மூடி உறங்கையில்
உன் நினைவலைகள்
நெஞ்சத்தை அணைக்க
உன்னோடு உறங்குவதாய்
என்னை இழக்கிறேன்
எல்லா இரவுகளிலும்..
அழுகை மறந்தேன்
பெறும்துயரம் தனை
சுவடின்றி துறந்தேன்,
அளவில்லாமல்
அனைத்தும் தந்தாய்.
இன்று பிரிவையும்
அளவில்லாமல் தந்து
அனாதையாக்குகிறாய்,..
காதலைக் கற்றுத் தந்த நீ
அதை மறப்பதையும்
சொல்லித் தர மறந்தது ஏனோ,
நீ இல்லாத நாளெள்ளாம்
வாழ்வைத் தொலைத்த நாட்களாக
கண்ணீரோடு கடந்து வருகிறேன்.,
நீ வரும் நாள் பார்த்து
காத்திருக்கிறேன்
வந்து அணைத்துவிடு..
கொழுந்தாய் எறியும்
எந்தன் ஏக்கம் தனை தீர்க்க
ஒரே முறை அணைத்துவிடு ...
Saturday, March 16, 2013
Subscribe to:
Posts (Atom)