நீ மௌனித்திருக்கும்
ஒவ்வொரு நொடிகளிலும்
சிந்தனை சிதைந்து
இதயம் நொறுங்கி
துடித்து பரிதவிக்கிறேன்
முத்தமொழிகள் பேசிய
உன் உதடுகள்
இன்று
மௌனத்தை தாங்கி நிற்க
வாய் மொழி கேட்காவிடினும்
உன் கை மொழி
காவியத்திற்காக
கலங்கிக் கொண்டு
காத்திருக்கும் பேதையாய் நான்...
மௌனத்தை பரிசளித்து
என் இதயத்திற்கு
இறுதி அஞ்சலி
செலுத்தி விடாதே
உன்னை எதிர் பார்த்தே
என் இதயம் துடித்து
உன் மூச்சுக்காற்றின்
தீண்டலுக்காக
சுவாசமின்றி துடிக்கும்
எனக்கு சுவாசமாய் வருவாயா???