தனிமை நெருப்பாய் சுட்டுவிட
தனிமையிலும்
தவறவில்லை உன் நினைவுகள்
தள்ளி நீ சென்றாலும்
தவிக்குது என் மனம்..
தடைகள் பல கடந்து
தன்னம்பிகையாய் நேசம் கொண்டேன்
தவிக்க விடுவாய் என அறியாமல்
தவித்து இருப்பது சுகமென இருந்தேன்
தலை கோதி நீ ஆறுதல் தரும்
தருணத்திற்காக...
தவித்திருக்கிறேன்
தனித்திருக்கிறேன் தினமும்
தலை கோத நீ இல்லை..
தவிக்க வைப்பதில் சுகமா உனக்கு...
தன்னம்பிக்கையை
தளர வைத்து விடாதே..
தவிப்பது என் மனம்மட்டுமல்ல
தவிக்கும் இதயத்துள்
துடித்து கொண்டு இருப்பது
நீயும் தான்....