
நீ இல்லாத
என் வானம்
இருளில்..
ஏக்கங்கள்
எனதருகில்
சொந்தங்கள்
வெகு தொலைவில்..
நெஞ்சை கீறும்
முட்களாய்
உன் நினைவுகளால்
என் இருதயம் குருதியில்...
நீடிக்க வேண்டாம்
என் வாழ்வு
இந்நிலையில்..
வந்து முடித்து விடு
என்னை முடித்து விடு
வேண்டாம் என் வாழ்வு
நரகத்தில் ..
என் ஆசைகள்
நிறைவேறட்டும்
சொர்க்கத்தில்....