
Thursday, June 18, 2009
Tuesday, June 16, 2009
Saturday, June 13, 2009
என்னுள் வாழும் உனக்கு....

என்னுள் நீ...
என் இதயத்தில் நீ...
என் இதயத்தின் அறையில்
வாழ்ந்து என்னையும்
வாழவைக்கிறாய்.....
என் கண்களில் நீ...
என் கண்கள் மூட மறுக்கிறது...
உன்னை இருட்டுக்குள்
வாசம் பண்ண வைக்க
மனம் வராமல்....
என் சிந்தையில் நீ...
என் கற்பனை எல்லாம்
கவியமாய் மாற போவது
உன்னால்...உன்னால்...
உன்னால் மட்டுமே....
பேசி பழகிய நாட்கள்
எல்லாம் இன்னும்
என் நாள்குறிப்பில்
பத்திரமாய்......
உன்னோடு பேசாத நாட்கள்
எல்லாம் நான் வாழாத நாட்களாய்
என் இதயக்குறிப்பில்....
என்றென்றும்.....
நீ கண்களால் வரையும்
ஓவியம் எல்லாம்
எனக்கு மட்டும்
புரிய மறுக்கிறது...
நான் காண்பது
உன் கண்களை அல்ல...
உன் இதயத்தை.....
இதயமொழி பேசு
உணர்வேன் நான்....
என் கைகளில் நீ....
காவியமாய்.......
இல்லை இல்லை...
கவிதையாய் வாழ்கிறாய்...
என்னோடு...
என்றும் அழியாத
கவிதை நீ......
Sunday, June 7, 2009
என் சுவாசமாய் நீ.....

உன்னையே எண்ணினேன்
என்னையே மறந்தேன்.....
இலை மூடும் பனிப்போல்
என் பாசத்தை
எனக்குள்மூடினேன்...
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
சொல்ல இயலாமல் நான்....
பாறையில் பூக்கும் பூவாய்
என்னுள் ஒரு ஆனந்தம்......
தனிமையில் சிரிக்கிறேன்.....
உன்னையே தேடி
அலையும் நெஞ்சம்.....
மௌனம் என்னைவிட்டு
வெளியேறாமல் தவிக்கிறது.....
என்னை சுற்றி நிகழும்
நிஜங்கள் கூட நிழலாய்
என் முன் வலம் வருகிறது....
காற்றில் இருந்து
என் சுவாசத்தை
தனியே பிரித்துகொடு....
என் சுவாசமாய் நீ.....
நீ!! காற்றோடு கலப்பதை
தாங்கும் இதயம்
எனக்கு இல்லை!!!!!
Wednesday, June 3, 2009
Subscribe to:
Posts (Atom)